முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் கவனத்திக்கு - பள்ளிகல்வித்துறை முக்கிய அறிவிப்பு

தனிக்கவனம் :
அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு *நடைபெற்று வரும் பத்தாம் வகுப்பு மற்றும்
மேல்நிலை இரண்டாம் ஆண்டுக்கான முதல் திருப்புதல் தேர்வு, அந்தந்த பாடத் தேர்வுகள் முடிந்து 5 நாட்களுக்குள் விடைத்தாள்களை திருத்தி தயார் நிலையில் வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேலும் மதிப்பெண் பட்டியலில் தலைமையாசிரியர் கையொப்பம் மற்றும் ஆசிரியர் கையொப்பம் மட்டுமே இருக்கவேண்டும் எக்காரணம் கொண்டும் தலைமை ஆசிரியர் பெயர் மற்றும் பள்ளியின் பெயர் பயன்படுத்தக்கூடாது என்பது தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மதிப்பெண் பட்டியல் ஒப்படைப்பதற்கான தேதி பிறகு அறிவிக்கப்படும் என்பதையும் ' தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.