TNPSC Tips - வரலாறு 6 ஆம் வகுப்பு முதல் பருவம்

 வரலாறு 

 ஆறாம் வகுப்பு முதல் பருவம் 

 அலகு  1 - வரலாறு என்றால் என்ன .?

  • வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் காலவரிசைப் பதிவு 
  • வரலாறு என்ற சொல் கிரேக்கச் சொல்லான 'இஸ்டோரியா' என்பதிலிருந்து பெறப்பட்டது .இதன் பொருள் "விசாரிப்பதன் மூலம் கற்றல் "
  • இந்தியாவின் அகழாய்வு செய்யப்பட்ட சில முக்கிய இடங்கள் 
    • பழையகற்கலாம் :
      • பிம்பேட்கா 
      • ஹன்சாகி பள்ளத்தாக்கு 
      • அத்திரம் பாக்கம் (தமிழ்நாடு)
    • புதிய கற்காலம் 
      • பூர்ஜஹோம் 
      • கோல்டிவா 

      • மாகரா 
      • சிரண்ட் 
      • மெஹர்கர்
      • பிரம்மகிரி 
      • பையம்பள்ளி  
    • வெண்கலக்காலம் 
      • லோத்தல் (குஜராத்)
    • இரும்பு காலம் 
      • ஹல்லூர் 
      • ஆதிச்சநல்லூர் 
  •  நாணயவியல் - நாணயம்,  அதன் வரலாறு தொடர்பான அறிவியல் சார்ந்த துறை.
  • பழங்கால மக்கள் வேட்டையாடியதை மலைப்பாறைகளிலும் குகைகளிலும் வரையப்பட்டுள்ள  பாறை ஓவியங்களிலிருந்து அறிய முடிகிறது.
  • பாறை ஓவியங்கள்: வேட்டைக்கு போனவர்கள் அங்கு நடந்தது என்ன என்பதை, தங்களோடு வர இயலாதவர்களுக்கு காட்டுவதற்காக தீட்டியிருக்கலாம். 
  • வரலாற்றுக்கு முந்தையகாலம்: கற்கருவிகளைப் பயன்படுத்தியதற்கும் எழுதும் முறைகளை கண்டுபிடித்ததற்கும் இடைப்பட்ட காலம்.
  • வரலாற்றுத் தரவுகளைத் தொல்லியல் அடையாளங்களான கற்கருவிகள், புதைப்படிவங்கள், பாறை ஓவியங்கள் போன்றவற்றில் இருந்து பெறுகிறோம்.
  • வேட்டையாடுதல்: பழங்கால மனிதர்களின் தொழில் 
  • வரலாற்றின் ஆதாரங்கள்:
    • தொல்பொருள் சான்றுகள்:
      • நாணயங்கள் 
      • கல்வெட்டுகள் 
        • பாறை கல்வெட்டுகள் 
        • கோயில் சுவர் கல்வெட்டுகள் 
        • உலோக தூண் 
        • செப்பேடுகள் 
      • தொல் கைத்திறன் பொருட்கள்
        • பானைகள் 
        • பொம்மைகள் 
        • கருவிகள் 
        • அணிகலன்கள் 
      • நினைவுச்சின்னங்கள் 
        • அரண்மனைகள்  (திருமலை நாயக்கர் மகால்)
        • கோட்டை (வேலூர்)
        • கோயில்கள் (தஞ்சாவூர்)
        • ஸ்தூபி (சாஞ்சி)
        • மடங்கள் (டபாங்)
    • இலக்கியச்சான்றுகள் 
      • மதசார்பற்ற இலக்கியம் 
        • காப்பியங்கள் & பாடல்கள் (சாகுந்தலம்)
        • வெளிநாட்டுப் பயண குறிப்புகள் 
        • இந்திய ஆசிரியர்களின் நூல்கள் 
        • நாட்டுப்புற கதை பாடல்கள் 
      • மதச்சார்புள்ள இலக்கியம் 
        • இதிகாசங்கள் 
          • இராமாயணம் 
          • மகாபாரதம் 
        • பக்தி இலக்கியங்கள் 
          • தேவாரம் 
          • நாலாயிரத் திவ்யபிரபந்தம் 
          • திருவாசகம் 
  • கல்வெட்டியல் - கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்ட செய்திகளை ஆராய்வதற்கான  துறை.
  • பேரரசர் அசோகர் :
  • அசோகரின் ஆட்சியில் புத்தமதம் ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் பரவியது.
  • கலிங்க  போருக்கு பின் அசோகர் போர் தொடுப்பதைக் கைவிட்டார்.
  • இப்போருக்கு பின் புத்த மதத்தை தழுவி அமைதி, அறத்தைப் பரப்ப தன் வாழ்வையே அர்ப்பணித்தார்.
  • இவர் பொது மக்களுக்கு ஆற்றிய சேவை முன் மாதிரியாக விளங்கியது.
  • வெற்றிக்கு பின் போரைத் துறந்த முதல் அரசர்.
  • உலகிலேயே முதன் முதலாக விலங்குகளுக்கும் தனியே மருத்துவமனை அமைத்து தந்தவர்.
  • இன்றும் அவர் உருவாக்கிய சாலைகள் பயன்படுத்தபட்டு வருகின்றன.
  • தேசிய கொடியில் உள்ள 24 ஆரக்கால் சக்கரம் அசோகர் நிறுவிய சாரநாத் கற்றூணில் உள்ள  முத்திரையிலிருந்து  பெறப்பட்டது.
  • வில்லியம் ஜோன்ஸ், ஜேம்ஸ் பிரின்செப், அலெக்ஸ்சாண்டர் கன்னிங்காம் போன்றவர்களின் வரலாற்று ஆய்வுகள் மூலம்  அசோகரின் சிறப்புகள் உலகிற்கு கொண்டுவரப்பட்டன.
  • அசோகரின் வரலாற்று ஆவணங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டவர் - சார்லஸ் ஆலன் 
  • நூலின் பெயர் 'The Search for the India's Lost Emperor'. (2012)
  • அசோகரின் ஆட்சியில் புத்த மதம் நாடு முழுவதும் பரவியது 
  • பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை - வேட்டையாடுதல்.
  • பழைய  கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள் - குகைகள்.
  • பழைய கற்காலத்தைச் சார்ந்த கற்கருவிகள் சென்னைக்கு அருகில் உள்ள அத்திரம்பாக்கத்தில் கிடைத்துள்ளன. 
  • வரலாற்றின் தந்தை ஹெரோடோட்டஸ். 



















Post a Comment

Previous Post Next Post